மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனைமர விதைகள் விதைக்கும். இந்த ஆண்டிற்கான பணி தூத்துக்குடி மாவட்டம் உதயமான 37 வது ஆண்டு துவக்க நாளில் தொடங்கியது .
தூத்துக்குடி மாவட்டத்தில் அழிந்து வரும் பனையை பாதுகாத்து ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையோடு, சமூக அக்கறையோடு எந்த நிதி உதவி பெறாமல் ஒரு கோடி பனைமர விதைகளை விதைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தை, குறிக்கோளாகக் கொண்டு நிலத்தடி நீரை மேம்படுத்த, புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் தடுக்க கடற்கரை, தீவு பகுதிகளும், மண் அரிப்பை தடுக்க, கரைகளை வலுப்படுத்த, நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தாங்கரை, வாய்க்காங்கரை பகுதிகளிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், ஓரங்களிலும், விரும்பி கேட்ட தனியார் இடங்களிலும் பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள். தற்போது வரை சுமார் 74 லட்சம் பனை மர விதைகளை விதைத்துள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் , பொது மக்களுக்கும் பனை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மாநாடு, கருத்தரங்கு, போன்ற பல்வேறு முகாம்களை நடத்தி பனையின் பயன்களையும், பனை பொருட்களின் மருத்துவ குணங்களையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டிற்கான பனை மர விதை விதைக்கும் பணி தூத்துக்குடி மாவட்டம் உதயமான 37 வது ஆண்டு துவக்க நாளில் புத்தன் தருவை தேரி பகுதியில் வைத்து தொடங்கியது. நிகழ்ச்சிக்கு லீடூ டிரஸ்ட் தொண்டு நிறுவனர் இயக்குனர் எஸ் பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத்தலைவர் ஏ.பொ. சுதாகர், தென்மண்டல தலைவர் எல் ராம்குமார், தென் மண்டல செயலாளர் ஜி இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு பனை மர விதைகள் நடும் பணியை துவக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது : ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி எடுத்து கடற்கரை, தீவு பகுதிகளிலும் ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்காங்கரை பகுதிகளிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும், சாலை ஓரங்களிலும் விரும்பி கேட்ட தனியார் இடங்களிலும் பனைமர விதைகளை விதைத்து வருகிறோம். மேலும் பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகளை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள்,இளைஞர்களிடத்திலும், மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் பொது மக்களிடத்தில் தொடர்ந்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். நாங்கள் எடுத்த முயற்சி தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. எங்களின் தொடர் முயற்சி காரணமாக தமிழ்நாட்டில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு பல்வேறு சமூக அமைப்பினரும், இயக்கத்தினரும்,. சமூக ஆர்வலர்களும் பனைமர விதைகளை விதைத்து தருகிறார்கள் இது எங்கள் முயற்சிக்கு மிக பெரிய வெற்றியாக கருதுகிறோம். மேலும் எங்கள் சேவையை அங்கீகரித்து, பாராட்டி, ஊக்க படுத்துகின்ற விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மன் கீ பாத் நிகழ்ச்சியில் பனை விதை விதைக்கும் பணியை பாராட்டி பேசியுள்ளார்கள். மேலும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் கடந்த ஜூன் மாதம் 5 தேதி சுற்றுச்சூழல் தின விழாவில் எமது நிறுவனத்திற்கு “கிரீன் சாம்பியன் விருதுனையும்” ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கி பாராட்டு உள்ளார்கள். மேலும் பல்வேறு தனியார் சேவை அமைப்புகள், நிறுவனங்கள் எங்களுக்கு பல விருதுகளை வழங்கி பாராட்டி உள்ளார்கள் . இந்த விருதுகள்,மற்றும் பாராட்டுக்கள் எங்களை ஊக்கப்படுத்துவதாகவுமஉள்ளது. எங்கள் சேவை அங்கீகரித்து மேன்மைப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கும், தனியார் சேவை அமைப்புகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு எங்களைப் பின் தொடர்ந்து பனை விதைகளை விதைத்து வரும் அனைத்து அமைப்பினருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இந்த தருணத்தில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார். முன்னதாக மதர் இளம்பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெபா செல்வி அனைவரையும் வரவேற்றார், முடிவில் மதர் கற்பக தரு பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜாக்குலின் நன்றி கூறினார்.தூக்க விழாவில் ஒரே நாளில் 10ஆயிரம் பனைமர விதைகள் விதைக்கப்பட்டது. இதில் பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மதர் மகளிர் சுய உதவி குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளரும் , லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்களும் சிறப்பாக செய்தனர்


