அரசு போட்டி தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நேரத்தினை சரியாக பயன்படுத்தி எழுதினால் வெற்றி பெறலாம் என சாத்தான்குளத்தில் நடந்த ஊர்வசி அகாடமி திறப்பு விழாவில் மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ, ஊர்வசி எஸ். அமிர்தராஜ் தொகுதி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஸ்ரீவைகுண்டம், ஏரலில் ஊர்வசி அகாடமி பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜ் பிறந்த நாளையொட்டி சாத்தான்குளத்தில் அரசு தேர்வுகளுக்கான ஊர்வசி அகாடமி இலவச பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுககு ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் தலைமை வகித்தார். சாத்தான்குளம் வட்டாட்சியர் ரதிகலா, ஒன்றிய ஆணையர் சுரேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் ரெஜினிஸ்டெல்லாபாய், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் வேணுகோபால் வரவேற்றார்.
மாவட்ட எஸ்.பி,, பாலாஜி சரவணன் பங்கேற்று, பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசியதாவது, நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து பிறந்து பலமுறை போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று இப்போது ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். வேலை வாய்ப்பில் வெற்றி பெற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும். . மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளை எழுதினால் நிச்சயம் வெற்றி பெற்று அரசு பதவிக்கு செல்லலாம் .தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் போட்டி தேர்வு எழுதும் பொழுது கவனமாக கால நேரத்தை கருத்தில் கொண்டு போட்டி தேர்வு எழுதினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
இங்கே பயிற்சி முகாம் தொடங்கியுள்ள ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ இந்த பகுதி மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதுடன் அனைவரும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற உயரிய எண்னத்தில் தொடங்கி நடத்தி வருகின்றார் ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்று அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்ர். இதில் சாத்தான்குளம் டிஎஸ்பி, அருள், சாத்தான்குளம் வட்டார மனிதநேய மன்ற செயலர் மகாபால்துரை உள்ளிட்ட பலர் பேசினர்
இதில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, முதலூர் ஊராட்சித் தலைவர் பொன் முருகேசன், சாத்தான்குளம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜெகன் அந்தோணி டென்னிசன், முன்னாள் நட்சத்திர அரிமாசங்க தலைவர் சுந்தர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சாத்தான்குளம் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, பிரபு, முத்துவேல், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, ஜெயசீலன்துரை, தாசன், சொரிமுத்து, பிரபாகரன், ஆழ்வார்திருநகரி கோதாண்டராமன், டாக்டர் ரமேஷ்பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சங்கர் நன்றி கூறினார்


