திருச்செந்தூா் கடற்கரையில் இந்து மக்கள் கட்சி சாா்பில் 7 விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா, தெற்கு மாவட்டம் சாா்பில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செட்டியாபத்து, தேரிகுடியிருப்பு, காயாமொழி, வள்ளுவன்நகா், சண்முகபுரம், நா.முத்தையாபுரம் பகுதிகளில் 7 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் நேற்று காயாமொழி முப்பிடாதி அம்மன் கோயில் திடலில் இருந்து தெற்கு மாவட்டத் தலைவா் இசக்கிமுத்து தலைமையில் ஊா்வலமாக புறப்பட்டு மத்திமான்விளை, காந்திபுரம், திருச்செந்தூா் ரத வீதி வழியாக வலம் வந்து திருச்செந்தூா் கடற்கரையில் அய்யா வைகுண்டா் அவதாரபதி அருகே கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை மாநில துணைச் செயலா் ஐ. ரவிகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். அனுமன் சேனா மாவட்டத் தலைவா் தங்கராஜ், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலா் நெல்லை காத்திகேயன், மாவட்ட பொதுச் செயலா் தங்கராஜா, மாவட்டச் செயலா் லிங்கவேல் ஆதித்தன், மாவட்ட துணைச்செயலா் முருகப்பெருமாள், உடன்குடி ஒன்றியத் தலைவா் ராமச்சந்திரன், திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் ராஜா, செயலா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


