சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மைத் திருத்தல 225 -ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தாெடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சொக்கன் குடியிருப்பில் உள்ள பிரசித்தி பெற்ற அதிசய மணல் மாதா முதன்மைத் திருத்தல 225 -ஆவது ஆண்டு திருவிழா நேற்று காலை (செப். 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமை வகித்து கொடியேற்றினார். பின்னா், மறையுரை நடைபெற்றது.
மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா்செல்வம், சாத்தான்குளம் வட்டார முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன், தென்மண்டல பணிக்குழுக் ஒருங்கிணைப்பாளா் நெல்சன்பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனர். இரவு 7 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீா் கடகுளம் பங்குத்தந்தை அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் திருப்பலி நடைபெறுகிறது. திருவிழா முக்கிய நிகழ்ச்சியான 23ந் தேதி இரவு 10 மணிக்கு சப்பர பவனி நடைபெறுகிறது. 24 ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலி ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முதன்மை திருத்தல அதிபா் ஜான்சன்ராஜ் தலைமையில் திருத்தல நிதிக்குழு, அருள் சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகின்றனா்


