தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் லைன் டேப் உபமின் நிலையத்தில் நாளை 16.09.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் துணை மின் நிலையத்திற்குட்பட்ட செய்துங்கநல்லூர், அய்யனார்குளம்பட்டி, நாட்டார்குளம், விட்டிலாபுரம், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி மற்றும் சமத்துவபுரம் ஆகிய ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
அதே போல் ஸ்ரீவைகுண்டம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், இசவன்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயன்குறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, செந்திலாம்பண்ணை, வெள்ளூர், ஆதிச்சநல்லூர், சுப்ரமணியபுரம், பேட்துரைசாமிபுரம், கால்வாய், வல்லகுளம், பொன்னன்குறிச்சி, கருங்குளம், மல்லல் புதுக்குளம், அரசர்குளம், சேரகுளம், தூதுக்குழி, தெற்குகாரசேரி, ஆதாளிக்குளம், ராமானுஜம்புதூர், சிவந்திப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என ஸ்ரீவைகுண்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


