குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இன்னும் 400 ஏக்கர் நிலம் வரும் நவம்பர் மதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதன் பிறகு கட்டுமான பணிகள் 12 மாதத்திற்க்குள் முடிவடையும். கட்டுமான பணிகள் முடிவடைந்தில் இருந்து ஓராண்டுக்குள் குலசேகரப் பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் சாலைகள் வரும். இனி தனியார்களும் ராக்கெட் ஏவுவர்கள். 140 தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது. அடுத்ததாக சென்னையை சார்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது. தனியார் வருகையால் இஸ்ரோ வளர்ச்சி பாதிக்காது என்றார்.


