தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி அவர்களின் ஆலோசனைப்படியும், உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி அவர்களின் வழிநடத்துதலின்படியும்,
கருங்குளம் வட்டார வள மையத்தில் வைத்து அரசு மேல்நிலைப்பள்ளி கருங்குளம் தலைமை ஆசிரியர், மற்றும் வட்டார கல்வி அலுவலர் தலைமையில் வட்டார அளவிலான உள்ளடக்கிய கல்வி செப்டம்பர் 2023 மாதத்திற்கான வட்டார அளவிலான குழு கூட்டம் மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் வட்டார கல்விக்குழு உறுப்பினர்கள், சிறப்பாசிரியர்கள், பிசியோதெரபி, பாதுகாவலர், ஆயா, ஆசிரியர் பயிற்றுநர்கள், இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு வட்டார அளவிலான உள்ளடக்கிய குழுக் கூட்டத்தினை சிறப்பித்தனர். இக்குழுக் கூட்டத்தில் சென்ற ஜூலை -2023 மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நடைபெற இருக்கின்ற மருத்துவ முகாம் , பள்ளி அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் சிறப்புக் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை கண்டறிந்து வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்தல், சிறப்பு குழந்தைகளுக்கு கிடைக்கும் ஸ்காலர்ஷிப் விபரங்கள் ,சிறப்பு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொட்டு ,அரும்பு, மலர் ,புத்தகங்கள்
ஒவ்வொரு பள்ளி அளவிலும் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கிய கல்வியை முக்கியப்படுத்தும் பேனர் , தகவல் பலகை அல்லது முகப்பில் வைத்தல், சைகை மொழி ஆகியவை பற்றி தெளிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஒழுங்குகளை சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செய்திருந்தார்.


