ஜமீன்கோடாங்கிபட்டியில் ரூ.16.45-லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், ஜமீன்கோடாங்கிபட்டியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.45-லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீனிவாசன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், தொழிலதிபர் சுப்பாரெட்டியார், ஜமீன் கோடங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, கிளைச் செயலாளர் சந்தனவேல், திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


