திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை அகழாய்வுகள் மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக கட்டடப் பணியை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


