தூத்துக்குடி ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
பிலோமினம்மாள் விளையாட்டு மைதானத்தில், 28 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் மூன்று வாரங்களாக நடைபெற்றது. இதில் செயின்ட் பிசிசி ராஜபாளையம் அணி கோப்பையை வென்றது. டி நகர் ஸ்கார்பியன்ஸ் தாளமுத்து நகர் அணி 2வது இடத்தை பெற்றது. ஆட்ட நாயகனாக செயின்ட் பிசிசி அணி வீரர் நிரோஷன், தொடர் நாயகனாக டி நகர் ஸ்கார்பியன் அணி வீரர் ராமர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற அணிக்கு உதவி பங்கு தந்தை அமல்ராஜ் கோப்பையை வழங்கினார்.


