தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் தாதன்குளம் குடியிருப்பு பகுதியை சார்ந்த புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் 2023 – 2024 சார்பில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு புதிய பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலை முத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாதன்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சீதாலட்சுமி சுடலை,தாதன்குளம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜாய் அன்னமணி, ஆசிரியர் ஜெயராணி , கருங்குளம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பீபேகம், வெயில் முத்து, கருங்குளம் ஒன்றிய புதிய பாரத வட்டார ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திரன், கருங்குளம் வட்டார இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் ராஜ் , புதிய பாரத எழுத்தறிவு இயக்கத் தன்னார்வலர் அனிதா மற்றும் தாதன்குளம் கற்போர் மையத்தை சார்ந்த கற்போர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் செய்திருந்தார்.


