தூத்துக்குடி மாவட்டத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பெறுவதற்கான முகாம் வருகின்ற 09.09.2023 மற்றும் 10.09.2023 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கால்களை இழந்த , செயற்கை கால் தேவைபடுவோர்களுக்கு அளவு எடுத்து தயார் செய்து 12.09.2023 அன்று வழங்கப்படும்.
மேற்கண்ட முகாமில் கலந்துக் கொள்ள வருபவா்கள் அடையாள அட்டையுடன் கலந்துக் கொண்டு பயன் அடைய
கேட்டுக் கொள்ளப்படுகின்றது. முகாமானது காலை 9.00 மணி முதல் நடைபெறும்.பி.கீதாஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்


