கோவில்பட்டி ஸ்ரீ பிருந்தாவன் தியான மடத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் – ராதை வேடம் அணிந்து நடனமாடி அசத்திய குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிருந்தாவன் தியான மடத்தில் 11ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதைக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து நடனமாடி அசத்தினர். மேலும் பெண் பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும்,ஆண் பெண் இரு பாலாரும் கோலாட்டம் நடனம் ஆடியும் கண்ணனை வழிபட்டனர்.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ கலந்து கொண்டு கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து நடனமாடி அசத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சொசைட்டி தலைவர் தாமோதரன், அதிமுக நிர்வாகிகள் ராமச்சந்திரன், போடு சாமி, செல்வகுமார், பழனிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


