தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலை தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் குடியிருப்பு பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. குடியிருப்பு பகுதியில் ஆசிரியர் பணியுடன் சமூக பணி ஆற்றி வரும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
விழாவில் ஆசிரியை மாரியம்மாள் வரவேற்றுப் பேசினார். அமுதம் அறக்கட்டளை நிறுவனர் அமுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற செயலாளர் காமாட்சி முன்னிலை வகித்தார்.
வே.துரைச்சாமிபுரம் இந்து நாடார் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மங்கத்தாய், பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முருகன், அய்யனார் ஊத்து அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முத்துச்சாமி புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் எழிலன் ஆகியோருக்கு மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ் விருது வழங்கி கெளரவித்தார்.
வழக்கறிஞர் விஜய சுந்தர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத் சாமுவேல் வாழ்த்துரை வழங்கினர். நெடுஞ்சாலை செல்வராஜ் ஆசிரியர் தின கவிதை வழங்கினார். ஆசிரியர் பாலகுருசாமி நன்றி கூறினார். விழாவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற பொருளாளர் பத்மலதா, துணை தலைவர் சாந்தி சரவணன், பல் மருத்துவர் மேகலா பத்மநாபன் மற்றும் உறுப்பினர்கள், குடியிருப்பு பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மகளிர் நல மன்றம் செய்திருந்தது.


