சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நெல்லை தின விழா கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை தரமணியில் நடந்தது. அவ்விழாவில் சங்கத்தின் சார்பாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு நெல்லை ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது . வண்ணதாசன் சென்னை வர இயலாத சூழல் ஏற்பட்டதால் அவரது ஏற்புரை காணொளி பதிவு செய்து ஒளிபரப்பப்பட்டது. இதற்கிடையில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கம் மற்றும் எழுத்தாளர்கள் மூலமாக சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கத்தின் சார்பாக வண்ணதாசனுக்கு நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நெல்லை ரத்னா விருது வழங்கப்பட்டது.

எழுத்தாளர்கள் தீன், முத்தாலங்குறிச்சி காமராசு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். முனைவர் சௌந்திரமகாதேவன், சதீஷ் செல்வகுமார் ஆகியோர் விருதை வழங்கினர். இந்நிகழ்வில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கத்தின் கூடுதல் செயலாளர் நிஷாந்த் ஜூட், நிர்வாகி லியோ பிரகாஷ் , முனைவர் கந்தசுப்பு, எழுத்தாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் எழுத்தாளர் சந்திரமோகன் தனது “காலத்திருடன்” நூலை எழுத்தாளர் வண்ணதாசனிடம் அறிமுகம் செய்தார்.



