தூத்துக்குடியில் அன்னை தெரேசா 26ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் அன்னை தெரேசாவின் 26ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று பூபாலராயபுரம் மெயின் ரோட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு இளைய தலைமுறை சோசியல் டிரஸ்ட் நிறுவனர் செல்வம் தலைமையில் சூசையப்பர் ஆலய உதவி பங்குத்தந்தை கிங்ஸ்லின், வடபாகம் உதவி ஆய்வாளர் அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை உதவி பங்குத்தந்தை கிங்ஸ்லின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆதரவற்ற ஏழை மாணவ-மாணவியாருக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


