தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதேசிக் கப்பல் நிறுவனம் தொடங்கி, வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை வர்த்தக ரீதியாக மருளச் செய்த வ.உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப், உட்பட மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


