தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்.
இதில், வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி மாநகர் செயலாளர், இக்னேஷியஸ், டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, எஸ்சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாவட்ட தலைவர் ராஜாராம், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், சேகர் ஊடக பிரிவு சுந்தராஜ், மீனவராணி மிக்கேல் குரூஸ் அமைப்பு தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


