தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநில அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாராம், கோமதி மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள முழு உருவ சிலைக்கு மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


