விளாத்திகுளத்தில் ரூ1.60 கோடி மதிப்பீட்டில்வேளாண் விளைபொருள் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பணியை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நபார்டு வங்கி உதவியுடன் கிராமபுறஉட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் ரூ 1.60 கோடி மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் விளைபொருள் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள். நிகழ்விற்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன், சின்ன மாரி முத்து, ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அயன் ராஜ், திருநெல்வேலி விற்பனை குழு செயலாளர், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர், வேளாண்மை அலுவலர் துணை வேளாண்மை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட திமுக பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.


