தூத்துக்குடி மண்டலம் திருவைகுண்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரிவிக்குட்பட்ட பரம்பரை வழி சாரா அறங்காவலர் நிர்வகிக்கும் பட்டியலை சேராத திருவைகுண்டம் நகர் அ/மி நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று (03.09.2023) திருமணம் நடைபெற்ற மணமக்கள் இசக்கிதுரை – மாலதி ஆகியோர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் 4 கிராம் உட்பட ரூ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பு மிக்க) சீர்வரிசை இலவசமாக அளிக்கப்பட்டது மேற்படி நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்,திருவைகுண்டம் நகர கழக செயலாளர், வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
2


