திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா, நாளை (செப். 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், செப். 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலையில் அருள்மிகு அப்பா் சுவாமிகள், தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு, திருவீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகா் அஸ்திரதேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவில், செப். 8-ஆம் தேதி மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். செப். 9-ஆம் தேதி காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும். செப். 10-ஆம் தேதி காலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடா்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேருகிறாா்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சுவாமி சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். செப். 11-ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி எழுந்தருளி திருவீதி உலா வந்து மேலக்கோயில் சேருகிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேருகிறாா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், செப். 13-ஆம் தேதி நடைபெறுகிறது.


