நாசரேத்தில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான கால்பந்து போட்டிவருகிற 4ஆம் தேதி துவங்கி 09 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக ளுக்கு இடையேயான மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி வருகிற 04 ஆம் தேதி துவங்கி 09 ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது போட்டிகள் காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரையிலும் மாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரையிலும் நடைபெறுகிறது.
போட்டிகளில் சென்னை, டோனாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வி.கே.புரம், ஊட்டி, குளச்சல், காயல்பட்டணம், மூக்குப்பீரி, தென்காசி, ஆறுமுகநேரி, நாசரேத், மார்த்தாண்டம் தூத்தூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து பள்ளி கால்பந்து அணியினர் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், மற்றும் ஆசிரியர்கள் பெலின் பாஸ்கர், தனபால், சுஜித் செல்வசுந்தர், ஜெய்சன் சாமுவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.


