தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 539, மற்றும் 540வது புதிய கிளைகள் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் ஆகிய இடங்களில் இன்று திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி, பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வங்கியின் 539 மற்றும் 540வது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் ஆகிய இடங்களில் ஆகிய இடங்களில் ATM/CRM வசதியுடன் இன்று காலை துவங்கியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் 539வது கிளையை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை கதிரியக்க நிபுணர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி திறந்து வைத்தார். பொது மேலாளர் (IT) ஜெயராமன் முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் 540வது கிளையை கமுதி க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறை டிரஸ்டி S.V.S.C. ஜெயராஜ் நாடார் திறந்து வைத்தார். பொது மேலாளர் (கடன் வழங்கல் துறை) நாராயணன் முன்னிலை வகித்தார். வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.
புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கூறுகையில், “பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறதுpagஅதன் தொடர்ச்சியாக இன்று 539 மற்றும் 540 வது புதிய கிளைகளை துவக்கியுள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளைகளின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார்.


