முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி அவர்கள் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட உதவி தொடக்க திட்ட அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் மங்கை ,கருங்குளம் வட்டார இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ் ஆகியோரின் ஆலோசனை படியும் கருங்குளம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இ -சேவை மையம் தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், மரிய ஜெயசீலா ஆகியோர் தலைமை தாங்கினார். கருங்குளம் uco வங்கி கிளை மேலாளர் கோபால் சுப்ரமணியன், குருவிகுளம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ் ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை கூறினர் .இ -சேவை மையம் தொடங்குவதற்கான இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் வட்டார இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ் வட்டார இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பீபேகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் இராஜேந்திரன், சிவசங்கரி, வெயில்முத்து, கருங்குளம் வட்டார மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் செய்திருந்தனர். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கடன் வசதி வங்கியில் இருந்து உடனடியாக பெற்று இ -சேவை மையம் ஆரம்பிப்பதற்கான கணினி உபகரணம் பெறுவதற்கு ஏதுவாக கருங்குளம் இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ் இதற்கான ஏற்பாடுகளை மிகவும் அருமையாக செய்திருந்தார்


