கருங்குளம் வட்டார வள மையத்தின் சார்பாக புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தின் 2023- 2024. வருடத்திற்கான 28 மையங்களைச் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு இயக்க கூட்டம் கருங்குளம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் உதவி தொடக்க நிலை திட்ட அலுவலர் ஜெயக்குமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், மரிய ஜெயசீலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்குனரின் செயல்முறைகளின் படி கூறப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் நடைமுறைகளும் விளக்கமாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தன் ஆர்வலர்களுக்கும் வாசித்து காண்பிக்கப்பட்டது. மேலும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் உட்கூறுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது .அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் புதிய பாரத இயக்கம் பற்றி மிகத் தெளிவாக. பெற்றுக்கொண்டு திட்டத்தை மிகச் சிறப்பாக நடத்த புதிய பாரத இயக்க கட்டகம் அனைத்து மையங்களுக்கும் வழங்கப்பட்டது. புதிய பாரத எழுத்தறிவு மையங்கள் செயல்படும் நேரம் மற்றும் பாதுகாப்பாக மையம் நடைபெற கூடிய இடம் மற்றும் கற்போருக்கான பாடத்திட்டம் ஆகிய விபரங்களை பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை புதிய பாரத எழுத்தறிவு திட்ட கருங்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திரன், இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் ராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் சிவசங்கரி, வெயிலு முத்து , பீபேகம் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் செய்தி ருந்தனர் .


