நாசரேத்- மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8ம் தேதி அன்னையின் தேர் பவனி நடக்கிறது.
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பங்குக்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா நேற்று முன்தினம் 30ம்தேதி (புதன்கிழமை) தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (புதன்கிழமை) 1ம் திருவிழா மாலை 6. 30 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம்,திருப்பலி பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் நடந்தது. ஞானபிரகாசியார் பட்டணம் பங்குத்தந்தை சகாய ஜஸ்டின் கொடி யேற்றினார். அந்தோணியார்புரம் பங்குத்தந்தை மரியதாஸ் மறையுரை ஆற்றினார். இதில் இறைமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலி நடக்கிறது. 7ம்தேதி(வியாழக்கிழமை) 9ம் திருவிழா மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா ஆராதனை தைலாபுரம் பங்குத்தந்தை ததேயு தலைமையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பங்குத் தந்தை எட்வின் முன்னிலையில் நடக்கிறது. இதனை தொடர்ந்து சமபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
8ம்தேதி(வெள்ளிக்கிழமை) 10ம் திருவிழா காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. பாளையங்கோட்டை மறை மாவட்ட பங்குத்தந்தை எட்வின் தலைமை வகித்து மறையுரை ஆற்றுகிறார். அன்று மாலை 6மணிக்கு அன்னையின் தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதையடுத்து இரவு 8மணிக்கு கொடியிரக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் மற்றும் இறை மக்கள்,விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


