தூத்துக்குடி சேர்வைகாரன்மடம் பகுதியில் ஆபத்தான நிலையில், குறுகலாக உள்ள சாலையை சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை யூனியன் சாலையான சாயர்புரம் போப் இஞ்சினியரிங் காலேஜ் வழியாக சேர்வைகாரன்மடம் ஊராட்சி காமராஜ் நகர் வழியாக புதுக்கோட்டை காவல் நிலையம் புதுக்கோட்டை வரை செல்லும் சாலையானது இருபுறமும் பள்ளமாக உள்ளது. ஏற்கனவே உள்ள பழைய ரோட்டை உடைக்காமல் புதிய ரோடு போடப்பட்டுள்ளது. சாலை இருபுறமும் தரமான சரள் அடிக்காமல் உள்ளதால் இப்பகுதி அபாயகரமாக உள்ளது.
இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் உட்பட தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இரவு நேரங்களில் பலர் கீழே விழுந்து செல்லும் அபாயகரமான நிலை உள்ளது. எனவே, சாலை இரு ஓரங்களில் தரமான சரளை மண் அடித்து பள்ளங்களை நிரப்ப வேண்டும். உயிர்பலி ஏற்படும் முன் சாலை ஓரங்களை சீரமைக்க சாலையை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


