தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தில் தகுதியான மகளிர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களின் தெரிவித்துள்ள தகவல்களை சரிபார்க்கும் பணிகளை ஆய்வு செய்யும் பணி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், வட்டாட்சியர் பிரபாகரன் ஆகியார் உடனிருந்தனர்.


