திருச்செந்தூர் வட்டார அளவிலான போட்டிகளில் மூக்குப்பீறி தூய மாற்குமேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
திருச்செந்தூர் வட்டார அளவிலான போட்டிகள் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரியில் நடந்தது. இதில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பூப்பந்தாட்டப் போட்டியில் 19 மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 2வது இடத்தையும் மாணவிகளுக்கான 19 வயதுக்;குட்பட்ட கால்பந்து போட்டியில் முதலிடத்தையும்,14 வயதுக்குட்பட்ட பூப்பந்தாட்ட போட்டியில் 2வது இடத்தையும் பெற்றனர்.
தடகளப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜெனிஷா என்ற மாணவி 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2வது இடத்தையும் பெற்றார்.3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமிர்தா முதலிடத்தையும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2வது இடத்தையும் பெற்றார்.
மாணவர்களுக்கான 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 4 ஒ 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3வது இடத்தை பெற்றனர்.தனலட்சுமி என்ற மாணவி மும்முறை தாண்டுதலில் 3வது இடத்தையும் அபிஷா என்ற மாணவி குண்டு எறிதலில் 3வது இடத்தையும் 17 வயதுக்;குட்பட்ட பிரிவில் பிரின்சி உயரம் தாண்டுதலில 3வது இடத்தையும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அனுஷியா 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 3வது இடத்தையும் ஜெயசர்னி உயரம் தாண்டுதலில் 3வது இடத்தையும் பெற்றனர்.மாணவர்களுக்கான 14 வயதுக்குட்பட்ட பிரிவில் மாதேஷ் 600 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும், உயரம் தாண்டுதலில் முதலிடத்தையும் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
4×100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் 3வது இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவினளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் பிரைற்றன் ஜோயல்இ உடற்கல்வி ஆசிரியை ஜேஸ்மின் ஏஞ்சல்குமாரி ஆகியோரையும் பள்ளி தாளாளர் செல்வின்இ தலைமை ஆசிரியர் எட்வர்ட், பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், ஆசிரிய பெருமக்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பாராட்டினர்.


