தூத்துக்குடியில் மக்களை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் பூங்கா அருகே மற்றும் சுப்பையா 2 மற்றும் 3வது குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் இன்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாம்களில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தார். மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் இராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, வட்டச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


