தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க நடக்க முடியாத நபர் வந்ததையறிந்த எஸ்பி பாலாஜி சரவணன் தரை தளத்தில் நேரடியாக மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்து நடக்க முடியாதவரான பாலசுப்பிரமணியன் என்பவர் இன்று (28.08.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்து புகார் மனு கொடுப்பதற்காக மாவட்ட காவல்துறை அலுவலகம் வந்திருந்தார். இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தரை தளத்திற்கு வந்து அவரிடம் பிரச்சனையை கேட்டறிந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


