செய்துங்கநல்லூரில் சாலை அகலப்படுத்தப்படும் பணி மற்றும் இருபுறமும் சாக்கடை வறுகால் அமைக்கும் பணி நடந்துவருகிறது. திருச்செந்தூர் – பாளையங்கோட்டை -அம்பாசமுத்திரம்- தென்காசி சாலையில் நடைபெற்று வரும் இந்த பணியில் சி.எஸ்.ஐ. கோயில் அருகில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் சி.எஸ்.ஐ. கோயில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வறுகாலை சேர்க்கும் பணி நடந்துவருகிறது. இதற்கிடையில் பாலத்தில் மண் தூர்ந்து போய் கிடந்தது. இதனால் சாக்கடை தேங்கி கிடக்கிறது. இந்த இடத்தில் பாலத்தின் அடியில் கொட்டிக்கிடக்கும் மணலை அகற்றுதல் மற்றும் சாக்கடை தூர் வாரும் பணியை பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் துவக்கி வைத்தார். அருகில் பஞ்சாயத்து உறுப்பினர் ராஜ் மற்றும் பல இருந்தனர்.


