செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக பணியாற்றியவர் பட்டுராஜன். இவர் கடந்த வருடம் விபத்தில் இறந்து விட்டார். இவரது முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செய்துங்கநல்லூர் பஜாரில் வைத்து நடந்தது. இதற்காக பட்டுராஜன் படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க தலைவர் ஐயப்பன், விவசாயிகள் சங்க தலைவர் குமார் முன்னிலை வகித்தனர். திமுக கருங்குளம் ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், ஆனந்தி முருகன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர் . நிகழ்ச்சி ஏற்பாடுகளை அழகு தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


