மாப்பிள்ளையூரணி பகுதியில் பல்வேறு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குபட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வரவேற்புரையாற்றினார்.
மாப்பிள்ளையூரணியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.10.13 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடத்தையும், சிலோன் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.77 இலட்சம் மதிப்பில் பொது விநியோகக் கடை கட்டிடம் மற்றும் ரூ.13 இலட்சம் மதிப்பில் பொது விநியோகக் கடை கட்டிடத்தையும், வடக்கு சோட்டையன் தோப்பில் ரூ.10 இலட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பூப்பாண்டியாபுரத்தில் ரூ.12.30 இலட்சம் மதிப்பில் பொதுவிநியோகக் கடை கட்டிடத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் கனிமொழி எம்.பி பேசுகையில் மாப்பிள்ளையூரணி பகுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அதிகம் நான் வருகை தந்த இடமாக மாப்பிள்ளையூரணி உள்ளது. அதற்கு காரணம் எப்போதும் சந்திக்கின்ற நேரமெல்லாம் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை திட்டங்களை செய்து கொடுக்க வேண்டும் என்று சரவணக்குமார் கோரிக்கை வைப்பார். பல பணிகளை தொடங்கி வைப்பதற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இது போன்ற நல்ல பணிகள் நடைபெறுகின்றன.
சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதி நிதியின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அடிக்கடி சொல்வது எல்லாம் கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். என்று கூறுவார் அதனடிப்படையில் இந்த பகுதியில் 13 கோடியே 32 லட்சம் மதிப்பீல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பகுதியில் முதலைமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு நிதி 2 கோடிக்கு மேல் ஓதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.
மின் மயாணம் பணியும் நடைபெறுகிறது. தேர்தல் அறிக்கையில் கூறியப்படி பெண்களுக்கு செப்டம்பர் 15ம்தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ1000 வழங்கப்படுகிறது. அதே போல் மதிய உணவு வழங்கப்படுவதை போல் முதலமைச்சரின் காலை உணவு திட்டமும் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு நடைபெறுகிறது. அனைவருடைய வாழ்வாதரமும் உயர வேண்டும். கல்வி வளர்ச்சி என எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கின்றது. தமிழக முதலமைச்சருக்கு நீங்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில் கடந்த 2 வருடங்களில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு கனிமொழி எம்.பி அதிகம் வந்துள்ளார். இங்குள்ள பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் என்னை சந்திக்கும் போதெல்லாம் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் பல்வேறு சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பார். இந்த பகுதி வளர்ந்து வரும் பகுதியாகும் மக்கள் ஜனத்தொகைக்கேற்ப குடிதண்ணீர் வழங்கும் வகையில் கோரம்பள்ளம், பொன்னாங்குறி;ச்சி, பகுதியிலிருந்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. பொன்னாங்குறிச்சி பகுதியில் உள்ள மின்மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் மூன்றரை கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முழுமையாக முடிந்ததும் தினமும் 22லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக வழங்கப்படும். வரும் காலங்களில் முழுமையான பணிகள் நிறைவு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், துணைஆட்சியர் (பயிற்சி) பிரபு, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி அலுவலர் மகேஸ்வரி, பொறியாளர் தளவாய் மேற்பார்வையாளர் முத்துராமன், பொதுவிநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், துணை பதிவாளர் மாரியப்பன், செயலாற்றியர் சாம் டேனியல்ராஜ், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடநல அணி அமைப்பாளர் ராஜேந்திரன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.


