அனவரதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பில் இருந்து 9 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் வரலாற்று கள ஆய்வுக்கு 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கள ஆய்வுக்கு கூட்டிச்சென்று கட்டுரை எழுதி அவர்களின் ஆய்வு பணியை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வருகிற 29 ந்தேதி இந்த மாணவர்கள் கிருஷ்ணாபுரம் கலைசிற்பங்கள், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம், திருநெல்வேலி அருங்காட்சியகம் போன்ற இடங்களை கள பணி செய்ய உள்ளனர். அவர்களுக்கு முன்னோட்டமாக மாணவர்களை தயார் படுத்தும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சங்கரி தேன் மொழி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாணவர்களுக்கு களபணி குறித்து முன் குறிப்புகளை எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தமிழாசிரியர்கள் பட்டுராஜ், துரைபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.


