முறப்பநாட்டில் காலை உணவு திட்டம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை முறப்பநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையாளர் முத்துகிருஷ்ண ராஜா தலைமை வகித்தார். மு. புதுகிராமம் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


