நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற இரத்த தான முாகமினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரத்த தான முகாமினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்து, பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகிறது. அதனடிப்படையில் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் இன்று நடைபெற்றுவரும் இரத்த தான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இம்முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய மாணவியர்களை பாராட்டுவதோடு அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் இரத்ததானம் வழங்க முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பேசினார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமன முதல்வர் மரு.பிரின்ஸ் பயஸ், மகளிர் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உஷா, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்து தாஸ் வில்லியம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


