ஜமீன் கோடங்கிபட்டியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜமீன் கோடங்கிபட்டியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன்,தங்கவேல், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,
விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், கோடங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, குருவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, கிளைச் செயலாளர் செந்தில் வேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜஸ்டின்பிரபாகரன் உட்பட ஆசிரிய ஆசிரியைகள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.


