ஸ்ரீவைகுண்டம் ஆய்வாளர் அலுவலகத்துக்கு உள்பட்ட இந்து அறநிலையத்துறை கோயில்களில் தற்போது அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஒவ்வொரு கோயில்களையும் முன்னேற்றப்படுத்த இந்து அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் ஆய்வு மேற்கொண்டு கோயிலுக்கு தேவையான வேலைகள் தொடர்பான அறிக்கை சமர்பிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்தாலங்குறிச்சியில் உள்ள மிகவும் பழமையான வீரபாண்டிஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர் கோயிலில் தொல்லியல் ஆலோசர் மணி ஆய்வு செய்தார். சிவன் கோயிலை புதிதாக கல் கட்டிடமாக கட்டவும், கோயில் ஆகம விதிபடி தெட்சினாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சனீஸ்வரன், கஜலெட்சுமி, பைரவர், நந்தீஸ்வரர், நவகிரகங்கள், கொடி மரம் பிரதிட்சை செய்வது குறித்தும், ராம விநாயகரை சுற்றி கல் பிரகாரம் அமைக்கவும், லெட்சுமி நரசிம்மர் கோயிலையும் கல்கட்டிடமாக கட்டி முன்னால் கருட வாகனம் மற்றும் கொடி மரம் அமைக்கவும் அறங்காவலர் காமராசு மனுகொடுத்தார்.
இந்த கோயில்களை இந்து சமயஅறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் மணி ஆய்வு செய்தார். இது குறித்து அறிக்கையை அரசுக்கு சமர்பிப்பதாக அவர் கூறினார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, உதவியாளர் விசுவநாதன் , அர்ச்சகர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல் சிங்காத்தா குறிச்சி அரியநாச்சியம்மன், வல்லநாடு செல்வ விநாயகர், ஆழிவிளங்கும் பெருமாள், வசவப்பபுரம் ராமசாமி கோயில், விட்டிலாபுரம் விட்டீலேஸ்வரர் செய்துங்கநல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் சூடி கொடுத்த நாச்சியார் கோயிலும் அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் மணி ஆய்வு செய்தார். அறங்காவலர்கள் நாரயணசாமி, கேசவன், நாச்சியார், கோமதி, குருமாரியப்பன், உள்பட பலர் கலந்துகொண்டு கோயிலுக்கு தேவையான கோரிக்கைகளை தொல்லியல் ஆலோசகரிடம் விடுத்தனர். ஆய்வாளர் நம்பி உள்பட பலர் அவருடன் சென்றனர்.


