கடம்பூர் அருகே கே. சிதம்பராபுரத்தில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை கனிமொழி எம்பி திறந்துவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே கே. சிதம்பராபுரத்தில் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை கனிமொழி எம்பி திறந்துவைத்தார். விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் சின்னப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


