தூத்துக்குடி பக்கிள் ஓடையில் அமலைச்செடிகள், குப்பைகள் அகற்றும் பணியை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் உள்ள கருத்தப்பாலம் பகுதியில் இருந்து பக்கிள் ஓடையில் உள்ள அமலைச் செடிகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதில், ஓடையில் உள்ள அமலைச் செடிகள், குப்பைகள் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இப்பணியை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் பாா்வையிட்டு, பணியை சீராக செய்யுமாறு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா், மாநகராட்சி ஆணையரின் உதவியாளா் துரைமணி, மேயரின் உதவியாளா்கள் ரமேஷ், பிரபாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


