திருநெல்வேலி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேட்டை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் துணை இயக்குநர்/முதல்வர் சே.அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரசு தொழிற்பயிற்சி நிலையம் பேட்டை திருநெல்வேலியில் ஆகஸ்ட் 2023ம் ஆண்டிற்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. தற்போது தொழிற் பிரிவுகளில் இன்னும் பயிற்சியாளர் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக இருப்பதால் நேரடி சேர்க்கைக்கு 31-08-2023 வரை நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நிலையத்தில் நேரடிச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே பயிற்சியில் சேர விரும்புவோர் இந்நிலையத்திற்கு அனைத்து, அசல் கல்விச் சான்றிதழ்கள் (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு, ஆகிய அனைத்து சான்றிதழ்களின் இரண்டு நகல்கள் பாஸ்போட்டோ அளவு புகைப்படம் – 5) ஆகியவற்றுடன் 31-08-2023க்குள் இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை பெண்களுக்கு உச்சவயது வரம்பு இல்லை. அரசு ஐடிஐ-களில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி காலத்தில் தமிழக அரசால் மாதம் ரூ.750/-வீதம் உதவி தொகை, மடிக்கணினிஇ மிதிவண்டி, வருடத்திற்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், அரசு பள்ளயில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- கூடுதல் உதவி தொகை, இலவச பஸ்பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ரயில் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு முன்னணி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு என பேட்டை, அரசு தொழிற்பயிற்சி நிலையம், துணை இயக்குநர்/முதல்வர் சே.அருள் தெரிவித்துள்ளார்.


