குரும்பூரில் கிராம உதயம் சார்பில் பெண் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
கிராமங்களில் பெண் குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட பெண்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் குரும்பூர் சமுதாயநலக்கூடத்தில் நடந்தது. கிராம உதயம் சார்பில் நடந்த பயிற்சி முகாமுக்கு கிராம உதய நிறுவனரும், இயக்குனருமான சுந்தரேசன் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார்.
மேஆழ்வார்தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் ராமசந்திரன் வரவேற்றார். தொடர்ந்து பகுதி பொறுப்பாளர்கள் ஆறுமுகவடிவு, பிரேமா, முத்துசெல்வன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பொறுப்பாளர் ஆனந்த செல்வன் நன்றி கூறினார்.


