நாசரேத் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீவைகுண்டம் அணி வெற்றிபெற்று கோப் பையை தட்டிச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மாதாவனத்தில் பாய்ஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி 4நாட்கள் நடந்தது. போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் ஸ்ரீவைகுண்டம் அணியும், மாதாவனம் அணியும் மோதின. அதில் திருவைகுண்டம் அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினார். இதில் மாதாவனம் சரவணன், துரை, அமுல்ராஜ், தங்கராஜ், சங்கர், ஜெபராஜ், முத்துசெல்வன், ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாதாவனம் பாய்ஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.


