77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் துரைப்பாண்டியனின் பணியை பாராட்டு மாவட்ட ஆட்சியர் மரு.கிசெந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த பாராட்டு சான்றிதழ் பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர் துரைப்பாண்டியனை பள்ளி சார்பில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


