செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆழிகுடி ரோமன் கத்தோலிக்க தொடக்கப் பள்ளியில் 77வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி கலந்து கொண்டு கொடியேற்று மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு கலை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி, கண்கவர் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் இறுதியில் ஆசிரியர் லூயிஸ் நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


