அர்ஜூன் (பிறப்பு: ஆகஸ்டு 15, 1962) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.


