தூத்துக்குடியில் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவராக நாகராஜன், துணைத் தலைவராக அழகர்சாமி, அமைப்பாளராக குபேர் இளம்பரிதி, துணை அமைப்பாளராக விநாயகமூர்த்தி, வெயில்முத்து, மகேந்திரகுமார், விஜயபாலன், பிரபு, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை மாவட்ட அமைப்பாளர் குபேர் இளம்பரிதி மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஜேசுராஜா தயான், அந்தோணி செல்வதிலக், ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் “தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வழக்கறிஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, மற்றும் கருணா, மணி, பாஸ்கர், அல்பட், உடனிருந்தனர்.


