செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலையில் அமைந்துள்ள திரு நிழல் முத்துகிருஷ்ண தர்மபதியில் திருவிழா நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. அதை தொடர்ந்து 6 மணிக்கு உகப்பெருக்கும், 7 மணிக்கு பால் தர்மமும் நடந்தது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல் சந்தன குடம் எடுத்து வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு தவனப்பால் தர்மம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மதியம் அன்னதானமும் நடந்தது. மாலை 5 மணிக்கு உகப்பெருக்கும், அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு அய்யா தாலாட்டும் நடந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்ரீகுருசிவ சிவசந்திரரின் அய்யாவின் அற்புதங்கள் நிகழும் ஆன்மீக அருளிசை வழிபாடு நடந்தது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தென்னஞ்சோலை திரு நிழல் முத்துகிருஷ்ண தர்மபதி திருத்தாங்கள் பணிவிடையாளர்கள் செய்திருந்தனர்.


